முன்விரோதம் காரணமாக கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி பெண்ணை கொல்ல முயற்சி: சிறையிலிருந்து வந்த ரவுடி கைது

சென்னை: முன்விரோதம் காரணமாக தள்ளு வண்டியில் கடை நடத்தும் பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சினி (29). இவர், அசோக் நகர் 3வது அவென்யூவில் தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார்.

கடந்த 6ம் தேதி இரவு சிவரஞ்சினி கடையில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடியான பாபு (எ) டைமண்ட் பாபு (36) வந்து வீண் தகராறு செய்து தாக்கியுள்ளார். அதோடு இல்லாமல் தள்ளு வண்டியில் சிக்கன் பகோடா போட இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து மேலே ஊற்ற முயன்றுள்ளார். அப்போது உதவி கேட்டு சிவரஞ்சினி அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவருவதை பார்த்த ரவுடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பிறகு சம்பவம் குறித்து சிவரஞ்சினி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் ரவுடி பாபுவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பாபுவுக்கும், சிவரஞ்சினியின் மைத்துனருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக பாபுவை போலீசார் கைது ெசய்து சிறையில் அடைத்துள்ளனர். பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த பாபு சிவரஞ்சினியிடம் அவரது மைத்துனர் எங்கே என்று கேட்டு தகராறு செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ரவுடி பாபுவை கைது செய்தனர்.

Related Stories: