இந்தியாவில் 76.5 கோடி பேருக்கு கொரோனாவா?.. விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

வாரணாசி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பைவிட 17 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் ஞானேஷ்வர் சவுபே தலைமையில் நடைபெற்ற ஆய்வில், ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பதிவு செய்யப்படாத அல்லது அறிகுறியற்ற எண்ணிக்கையானது, அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 4.5 கோடியைவிட 17 மடங்கு (76.5 கோடி) அதிகமாக இருக்கலாம்.

நாட்டின் 34 ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 88 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், நோய்த் தொற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைக்கும், பாதிப்புக்கு சாத்தியமான எண்ணிக்கைக்கும் இடையிலான வேறுபாடு அறிகுறி இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம்’ என்றார்.

Related Stories: