தோண்ட தோண்ட சடலங்கள்!: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது..!!

துருக்கி : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் 8,574க்கு மேற்பட்டோரும், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோருக்கு உயிரிழந்தனர். துருக்கியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த பூகம்பத்தால், ஹத்தே, அடியமான், அங்காரா, சிவரன் உள்ளிட்ட நகரங்களில் கட்டடங்கள் தரைமட்டமாகின. சக்திவாய்ந்த பூகம்பத்தை  தொடர்ந்து 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்களும், 150க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது.

இதனால் துருக்கியில் சுமார் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோர், சிரியாவில் சுமார் 2,600க்கு மேற்பட்டோர் பேர் என மொத்தமாக 11,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும், பல நகரங்கள் சிதைந்து கான்கிரீட் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய நிலையில், மழை மற்றும் கடும் குளிர் மீட்புப்பணிக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதுவரை 10 ஆயிரதத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களுக்கு சென்ற துருக்கி அதிபர் எர்டோகன் பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார்.

Related Stories: