‘பதான்’ படம் நல்லாதானே இருக்கு: ஆளுங்கட்சிக்கு திரிணாமுல் எம்பி குட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் பேசுகையில், ‘பாலிவுட் திரைப்படமான `பதான்` படத்தை பார்த்தேன். அந்த படத்தில் அழகான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. பதான் படத்தை உருவாக்கிய இயக்குனர் சித்தார்த் ஆனந்த்திற்கு நன்றி. எங்களால் செய்ய முடியாததை ஷாருக்கான், டிம்பிள் கபாடியா மற்றும் ஜான் ஆபிரகாம் செய்து காட்டி உள்ளனர்.

அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். நீங்கள் பாலிவுட்டைப் புறக்கணிக்கச் சொன்னீர்கள்; ஆனால் அவர்கள் அழகான செய்தியுடன் கூடிய ஒரு படத்தைக் உங்களுக்கு காட்டியுள்ளனர்’ என்று கூறினார். மேலும் தனது உரையில், ‘எதிர்க்கட்சிக்கு ஒருவிதமான ஆட்சியும், உங்களின் (பாஜக) நண்பர்களுக்கு (அதானி) ஒருவிதமான ஆட்சியும் நடத்த முடியாது’ என்றார்.

Related Stories: