கேரள மாநிலத்திற்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம்!

கேரளா: கேரள மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, “வருகிற 19ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உள்ளது.

இதனால், மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ கேரளா, தமிழகத்தில் பருவமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், இம்மழை இயல்பைவிட அதிகளவு பதிவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல் நினோ காரணமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவில் மழை பொழிவு அதிகரித்து, தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post கேரள மாநிலத்திற்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Related Stories: