அதிபரின் விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில்  உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை  தளத்தில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் ஏர்போர்ஸ் ஒன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை விமான தளத்துக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் யாரேனும் உயிரிழந்தனரா என்பது பற்றிய தகவல்கள் வௌியாகவில்லை. இதற்கு முன் கடந்த 2016, 2021ஆகிய ஆண்டுகளிலும் இந்த விமான தளத்துக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நாட்டின் மிக முக்கியமான விமான தளத்திற்குள் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: