சர்வதேச கிரிக்கெட் பிஞ்ச் ஓய்வு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2021ல் நடந்த டி20 உலக கோப்பையில், பிஞ்ச் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி20 சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிஞ்ச் (36 வயது), தற்போது டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்து அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலிய டி20 அணியில் 2011ல் அறிமுகமான பிஞ்ச், 2013ல் ஒருநாள் போட்டியிலும், 2018ல் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். அவர் இதுவரை 5 டெஸ்டில் 278 ரன், 146 ஒருநாள் போட்டியில் 5,406 ரன் (அதிகம் 153*, சராசரி 38.89, சதம் 17, அரை சதம் 30), 103 டி20ல் 3120 ரன் (அதிகம் 172, சராசரி 34.28, சதம் 2, அரை சதம் 19) குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் பிக்பாஷ் லீக் உள்பட உள்ளூர் டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளதாக பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

Related Stories: