ஆட்கள் பற்றாக்குறையால் குமரியில் குறைந்து வரும் உளுந்து, சிறுபயிறு சாகுபடி

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் நெல், வாழை, ரப்பர், தென்னை சாகுபடி அதிக அளவில் நடக்கிறது.  கும்பப்பூ அறுவடையின் போது உளுந்து, சிறுபயிறு போன்ற தானியங்களை பயிரிடுவது வழக்கம். கன்னிப்பூ சாகுபடி ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, சிறுபயிறுகளில் இருந்து மகசூல் எடுக்கப்பட்டு, பின்னர் வயல்களை பண்படுத்தி விவசாயிகள் கன்னிப்பூசாகுபடி செய்வார்கள்.

இந்த நடைமுறை கடந்த காலங்களில் குமரி மாவட்டத்தில் இருந்து வந்தது. காலப்போக்கில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உளுந்து, சிறுபயிறு சாகுபடி குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் குறைவதுடன், வயல்களில் தேவையான நைட்ரஜன் சத்து குறைபாடும் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து முன்னோடி விவசாயி செண்பகசேரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தற்போது சுமார் 6500 ஹெக்டேர் முதல் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்து வருகிறது.

கன்னிப்பூவின் போது சாகுபடி பரப்பளவு அதிகமாகவும், கும்பப்பூ சாகுபடியின் போது பரப்பளவு சிறிது குறைவாகவும் இருக்கும். கடந்த காலங்களில் கும்பப்பூ அறுவடை தொடங்குவதற்கு முன்பு வயல்களில் உளுந்து, சிறுபயிறு போன்ற தானியங்களை விவசாயிகள் விதைப்பார்கள். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 8 கிலோ தானியங்கள் விதைக்கப்படும்.

இதில் அதிக அளவு உளுந்து பயிறு சாகுபடி செய்யப்படும். உளுந்து  அறுவடையின் போது  அதிக ஆட்கள் கிடைத்தது. அவர்களுக்கு ஒருவர் எவ்வளவு உளுந்து பறிக்கிறார்களோ அதற்கு ஏற்ப 5ல் ஒரு பங்கு கூலியாக உளுந்து வழங்கப்படும்.

பின்னர் காலப்போக்கில் அந்த கூலி  இரண்டில் ஒரு பங்கு என்ற நிலை ஆனது. ெதாடர்ந்து ஆட்கள் பற்றாக்குறை ஏற்படவே  உளுந்து, சிறுபயிறு சாகுபடி ெசய்வது குறைந்தது. உளுந்து, சிறுபயிறுகளின் வேர்முடிச்சில் நைட்ரஜன் இருக்கும்.அறுவடை ெசய்தபிறகு வயலை செடியோடு உழும்போது மண்ணிற்கு தேவையான அனைத்து நைட்ரஜன் சத்தும் கிடைக்கும். தற்போது உளுந்து, சிறுபயிறு சாகுபடி பரப்பு குறைந்து வருவதால், நைட்ரஜன் சத்திற்கு தேவையான ரசயன உரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குமரி மாவட்டத்தில் சுமார் 2500 ஹெக்டேர் முதல் 3 ஆயிரம் ஹெக்டேர் வரை உளுந்து சாகுபடி செய்யப்பட்டது.

 ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சாகுபடி பரப்பளவு குறைந்து சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தில் தற்போது மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியகுளம் ஏலா, வேம்பனூர் குளம் ஏலா ஆகிய பெரிய ஏலாவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  வீட்டு தேவைக்கு ஏற்ப கடுக்கரை உள்பட சில இடங்களில் குறைந்த அளவு உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உளுந்து பயிறுகளில் நோய்தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது வம்பன் 4, 5 ரகம் நோயை தாங்கி வளரகூடிய ரகம் ஆகும். இதனால் தோட்டக்கலைத்துறை உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories: