லியான் ஓபன் டென்னிஸ் அலிசியா சாம்பியன்: கார்சியா அதிர்ச்சி

லியான்: பிரான்சில் நடந்த லியான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை அலிசியா பார்க்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உள்ளூர் நட்சத்திரமும் இந்த தொடரின் முதல் நிலை வீராங்கனையுமான கரோலின் கார்சியாவுடன் (29 வயது, 5வது ரேங்க்) மோதிய அலிசியா பார்க்ஸ் (22 வயது, 51வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (9-7) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாகப் போராடியதால் 2வது செட் ஆட்டத்திலும் அனல் பறந்தது. 2 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்த விறுவிறுப்பான பைனலில் அலிசியா 7-6 (9-7), 7-5 என்ற நேர் செட்களில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டபுள்யு.டி.ஏ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அலிசியா வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: