பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தென்னரசுக்கு ஆதரவு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

டெல்லி: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,646 பேருக்கும் சுற்றறிக்கை மூலம் முடிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்த பின் அவைத் தலைவர் தமிழ்மகன் உ உசேன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளனர். தென்னரசுவுக்கு ஆதரவு கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,646 பேருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . ஒரு வேட்பாளர் பெயரை மட்டும் பரிந்துரை செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு| கூறிய குற்றச்சாட்டுக்கு சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: