தேசிய மாற்றுத் திறனாளிகளுக்குக்கான சிட்டிங் பாரா வாலிபால்: 22 மாநிலங்களை சேர்ந்த 450 வீரர்கள் தொடரில் பங்கேற்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்குக்கான வாலிபால் தொடரில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது. தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிட்டிங் பாரா வாலிபால் தொடர் நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இந்த தொடரில் 22 மாநிலங்களை சேர்ந்த 450 வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர் இறுதி போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடக அணி வெற்றி பெற்றது. இதே போல மகளிர் பிரிவுக்கான இறுதி போட்டியில் கர்நாடக மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின இதில் கர்நாடக அணி வெற்றி பெற்று அசத்தியது. தொடரை வென்ற அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். 

Related Stories: