பீகாரில் மக்கள் தீர்வு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் நிதிஷ் குமாரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

பீகார்: பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், மாவட்டம் தோறும் ’சமாதான் யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை நேற்று தொடங்கிய நிலையில் பீகார் மாநிலத்தில் மக்கள் தீர்வு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் நிதிஷ் குமாரை கண்டித்து திடீரென போராட்டம் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோர்கா வட்டம் கத்திஹார் கிராமம் வழியே பயணம் மேற்கொண்டபோது கிராம மக்கள் நிதிஷ் குமாரை மறித்து கோரிக்கைகளை முன்வைக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால் போலீஸ் அனுமதி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மக்கள் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, போலீஸ் மீது தீடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் உருவம் இடம் பெற்ற பதாகைகளை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.   

Related Stories: