3 கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் ரிக்கி கெஜ்: லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பிரமாண்ட விழாவில் விருதினை இந்தியாவிற்கு அர்பணிப்பதாக பெருமிதம்

வாஷிங்டன்: பெங்களூரு இசையமைப்பாளர் ரிக்கி கெஜ்-க்கு மூன்றாவது முறையாக கிராமி இசை விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 65-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த பாப்-ராக் பாரம்பரிய இசை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் நேற்று தொடங்கிய விருது வழங்கும் விழாவில் பெங்களூருவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ரிக்கி கெஜ்-க்கு மூன்றவது முறையாக கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் வெளியிட்ட டிவைன் டைட்ஸ் என்ற பாடல் தொகுப்புக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே ஆல்பத்திற்காக சிறந்த புதிய ஆல்பம் பிரிவில் விருதை வென்றிருந்தார். நடப்பாண்டு சிறந்து ஆழ்ந்து ஒலிக்கும் ஆடியோ ஆல்பம் என்ற பிரிவில் ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. பலரை வசீகரித்த இந்த இசை தொகுப்பில் 9 பாடல்கள் மற்றும் 8 இசை விடியோக்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், இளம் வயதில் கிராமி விருது பெற்ற 4-வது இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள அவர் விருதை இந்தியாவிற்கு அர்பணித்துள்ளார்.

Related Stories: