பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சாவுடன் இருந்த கேரள ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் டிராவல் பையுடன் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அவரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதில் 9.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே, போலீசாரை பூந்தமல்லி காவல் நிலையம் கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்டவர் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், திருநெல் கிராமத்தை சேர்ந்த ஷாக் சக்கிரியா (50) என தெரிய வந்தது. மேலும் அவர் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: