அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை

கரூர்: கரூர் அதிமுக பிரமுகர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கரூர் முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (50).  கரூர் மாநகராட்சி 32வது வார்டு அதிமுக செயலாளர். இவர் நண்பரான மகாதேவனை (32) நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவரை சந்திக்க சென்றபோது முத்துராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ  குடித்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஏன் போனை  எடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின் இரவு 10மணியளவில், வடிவேல் பைக்கில் சென்ற போது, திருமாநிலையூர் ராயனூர்  சாலையில் இருட்டான பகுதியில், மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் அவரை  வழிமறித்து, அரிவாளால், சராசரியாக வெட்டி விட்டு தப்பினர். ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை அப்பகுதியினர் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே  வடிவேல் உயிரிழந்தார். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் மகாதேவன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: