டாஸ்மாக் விடுமுறையை பயன்படுத்தி மது விற்ற 2 பேர் கைது: 120பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பூர்: தைப்பூசம் என்பதால் நேற்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இதனை சாதகமாக பயன்படுத்தி கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 7வது பிளாக் பகுதியில் மர்ம நபர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விற்பனைக்கு கள்ள சந்தையில்  விற்பனை செய்து வந்தார்.

தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (52) என்பவரை கைது செய்தனர்.

இவரிடமிருந்து 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன இதேபோன்று கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் மது பாட்டில்கள் விற்ற விக்கி என்கின்ற விக்னேஷ் (31) என்ற நபரை கைது செய்தனர் இவரிடமிருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன கைது செய்யப்பட்ட விக்கி மற்றும் ஏழுமலை இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: