அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர்பெயர் இல்லாதது தவறு என ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பின் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளனர். பொதுக்குழு தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர முன்கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்தது தவறு என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசுவை அறிவித்துளளது ஏற்புடையதல்ல என வைத்திலிங்கம் கூறியுள்ளார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம் வேதனை, மற்றும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் தமிழகன் உசேன் நடுநிலையை தவறியுள்ளார் என்றும் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

உரிமையும், தங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்ற ரகசியத்தை காப்பாற்றும் உரிமையும் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துளளார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் செயல் முரணானதாக உள்ளது என்று வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பொதுக்குழு முன்பு வைக்க வேண்டும் என்று பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துளளார். சட்ட விரோதமான செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம் என்றும் பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். நாங்கள் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் கூறியதை நேர்மையாக நிறைவேற்றவில்லை என பண்ருட்டி ராமச்சத்திரன் கூறியுள்ளார். தேர்தல் ஆணையடத்திடம் முறையிட உள்ளோம் எனவும் தெரிவித்துளளார். அதுமட்டுமின்றி சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு எங்களின் ஆதரவு இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.   

Related Stories: