பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்வர் உத்தரவு

சென்னை: வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க டி.ஜி.பி.க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது. காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி வாணிஜெயராம் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

வாணிஜெயராம் இசைப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: