திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.41  மணிக்கு தொடங்கி, இன்று நள்ளிரவு 12.48  மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி,  அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இரவு 9 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். இன்று நள்ளிரவு 12.48 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: