உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி எடப்பாடி நிகழ்ச்சி திடீர் ரத்து

மதுரை நகர பாஜ முன்னாள் தலைவர் டாக்டர் சரவணன், எடப்பாடி முன்னிலையில் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அவரது ஏற்பாட்டில் மதுரை விமான நிலையம் அருகே, எடப்பாடி முன்னிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு எதிரொலியாக எடப்பாடி ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதால், மதுரையில் இன்று நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை அவனியாபுரம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள மந்தையம்மன் கோயிலில் ஓபிஎஸ் அணி சார்பில் 108 தேங்காய்கள் உடைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Related Stories: