விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

தஞ்சை: கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றூ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: