கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயின் பறித்த 2 பேர் கைது

அண்ணாநகர்: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத் (29). சென்னையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த மாதம் 9ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த நபர், அருண் பிரசாத் கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்து சென்றார். புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காரல் மார்க்கஸ் (37) என்ற பழைய குற்றவாளி, கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்ததும், போதிய வருமானம் கிடைக்காததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அரியலூரில் பதுங்கியிருந்த இவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடமிருந்த 2 சவரனை பறிமுதல் செய்தனர். இதுபோல், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் (35) என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து அங்கேயே தங்கி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயின் மாயமானது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த ஜோ (47) என்பவர், இவரது செயினை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: