அண்ணா நினைவு நாளையொட்டி சமபந்தி விருந்து

திருவொற்றியூர்: பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள அன்னதான கூடத்தில், சமபந்தி பொது விருந்து நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்து கொண்டு, பக்தர்களுக்கு சமபந்தி விருந்தை தொடங்கி வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு புடவைகளை வழங்கினார். முன்னதாக, திருவொற்றியூர் அஜாக்ஸ் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு, கே.பி.சங்கர் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், திமுக நிர்வாகிகள் ராமநாதன், முருகேசன், சைலஸ், வாசுகருணாநிதி, பால, உமாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், திமுக சென்னை வடகிழக்கு மாவட்ட அவை தலைவர் குறிஞ்சிகணேசன் தலைமையில், நிர்வாகிகள் ஆசைத்தம்பி, கேபிள்டிவி ராஜா, மணிகண்டன், கோமலவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: