அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி

சென்னை: உறுதியான, நிலையான அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பன்னீருடன் சமரசம் செய்துகொள்ள பழனிசாமி இறங்கி வராததால் தமது நிலையை அறிவிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சந்தித்தது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, உறுதியான, நிலையான வேட்பாளரை நிறுத்த வேண்டியது அவசியம் என அதிமுகவிடம் வலியுறுத்தினோம். அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளர் நிறுத்துவது அவசியம் என்பதை பன்னீர், பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டோம். ஒன்றிணைய வேண்டும் என பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை பழனிசாமி, பன்னீர் ஆகியோரிடம் எடுத்து கூறினோம். வரும் 7ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் பாஜகவின் நிலைப்பாடு பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். அதிமுக ஒரே அணியாக நிற்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதால் பழனிசாமி அணி அதிர்ச்சியடைந்துள்ளது. பன்னீருடன் சமரசமாக செல்லுமாறு பாஜக தலைமை வற்புறுத்துவதால் பழனிசாமி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Related Stories: