ஒன்றுபட்ட அதிமுக அவசியம்!: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம்.. பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு, பழனிசாமி பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம் என சி.டி ரவி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சந்தித்தது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சி.டி.ரவி, தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் பணபலம் விளையாடும் என்பதை அறிவோம். இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக அவசியம். பாஜக நிலைப்பாடு குறித்து அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்தை பழனிசாமி, பன்னீர் ஆகியோரிடம் எடுத்து கூறினோம்.

தமிழக நலனுக்காக இருவரும் இணைந்து பணியாற்ற பாஜக சார்பில் வலியுறுத்தினோம். இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று எடுத்துக் கூறினோம். அதிமுகவை ஒன்றுசேர்க்கவே பாஜக சார்பில் முயற்சிக்கிறோம். ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு நிறைவு பெற பிப்ரவரி 7 வரை அவகாசம் உள்ளதால், பாஜகவின் நிலைப்பாட்டை அப்போது அறிவிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுப்பட்டு இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

Related Stories: