2023ல் முதன்முறையாக தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520க்கு விற்பனை செயப்படுகிறது. உலக நாடுகள் மத்தியில், குறிப்பாக இந்தியாவில் தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. கொரோனா கால கட்டத்துக்கு பிறகு தான் மக்கள் சேமிப்பதில் ஆர்வம் செலுத்த தொடங்கினர். நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலானோர் தற்போது, தங்கத்தில் சேமிக்கவே விரும்புகின்றனர். இந்த சூழ்நிலையில், தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. அதன் பிறகு, தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது.

தென் இந்தியாவில் தங்கத்தை பெண்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, தங்கத்தை வைத்துள்ள அதிகம் வைத்துள்ள மாநிலத்தில், தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.600 வரை அதிகரித்தது. எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது.

29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது. ஆனால், கடந்த 31ம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனையானது. மேலும், ஒரு கிராம் ரூ.12 குறைந்து ரூ.5,338க்கும் விற்பனை செய்யப்பட்டது. திடீரென குறைந்த தங்கத்தின் விலையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், வரலாறு காணாத வகையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு நாளில் மட்டும் தங்கத்தின் விலை 1,096 ரூபாய் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் காலையில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880க்கு விற்பனையாது. ஆனால், மாலையில் சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520க்கு விற்பனை செயப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து 5,440க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.4 குறைந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Related Stories: