சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு விசா வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் அவர் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், நேற்று அவருக்கான விசா வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக இந்தியா புறப்பட்டார்.

* நியூசிலாந்துடன் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 2019 செப்டம்பரில் இருந்து சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 25 தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் உலக சாதனை படைத்துள்ளது.

* பிரான்ஸ் கால்பந்து அணி தற்காப்பு வீரர் ரபேல் வெரேன் (29 வயது) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2013ல் தேசிய அணிக்காக அறிமுகமான இவர் 93 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.

* இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடரில் நியூசிலாந்து அணிக்காக அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் களமிறங்குவார் என தேர்வுக் குழு தலைவர் கவின் லார்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில், இளம் சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அகமது (18 வயது) அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.

Related Stories: