திருப்புவனம் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால் திருப்புவனம் பகுதிகளில் கடந்த ஆண்டு இயங்கி வந்த திருப்புவனம் நெல்முடிகரை, அச்சங்குளம், கீழடி,கொந்தகை போன்ற இடங்களில் இதுவரை கொள்முதல் மையங்கள் துவக்கப்ட வில்லை. திருப்புவனம் தாலுகாவில் சுமார் 3ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் கதிர் அறுவடை துவங்கி நடந்து வருகிறது. அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ள பகுதிகளில் அரசு நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த ஆண்டு அச்சங்குளத்தில் மட்டும் சுமார் 25ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டன. இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்தனர். ஆனால் அச்சங்குளத்தில் இதுவரை திறக்கப்பட வில்லை. கொள்முதல் மையம் துவக்கப்படும் என எதிர்பார்த்து கடந்த ஆண்டு கொள்முதல் மையம் செயல்பட்ட இடத்தில் விவசாயிகள் நெல் மூட்டைகளை இறக்கி வைத்து காத்திருக்கின்றனர். விவசாயிகள் தரப்பில் கூறுகையில், அச்சங்குளத்தில் சென்ற ஆண்டு சிறப்பாக நெல் கொள்முதல் மையம் செயல் பட்டு வந்தது.

இந்த ஆண்டும் நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொள்முதல் மையம் திறக்கப்பட வில்லை. திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் மூட்டைகளை கொண்டு வந்து இறக்கி வைத்துள்ளோம் என்றனர்.

Related Stories: