ஜனநாயகத்தின் குரலாக இருக்க வேண்டும்: மெரினாவில் பேனா நினைவு சின்னம் வைக்க ஆதரவு.! நடிகை காயத்ரி ரகுராம் கருத்து

சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா போன்ற நினைவுச் சின்னம் எழுப்ப நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பேனா பொதுவானது, பேனா சிலையை வைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும், பேனா ஒரு சிறந்த கருவியாகும், சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பேனா ஒரு அரசியல் கட்சிக்கு சேர்ந்தவையாக இருக்கக்கூடாது, இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும்.

Related Stories: