கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது: பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

வேலூர்: பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது எனவும் முதல்வர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில், வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 கோடியே 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 4 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 1 கோடியே 71 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், கீ.வ. குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 85 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், என மொத்தம் 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 15 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப. கார்த்திகேயன், வி. அமுலு விஜயன், துணை மேயர் சுனில்குமார், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திண்டுக்கல், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பூர், திருவாரூர், சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர், மதுரை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: