பட்ஜெட் தினத்தில் மக்களுக்கு ஷாக்: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வந்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டெ இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது. எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.

நேற்று சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.5,360க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.74.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக நகை வாங்குவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: