ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: ஆன்லைனில்  பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அரசு பெண் டாக்டர் முன் வாலிபர்  நிர்வாண போஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு சுகாதாரத்துறை சார்பில் இ சஞ்சீவினி என்ற ஆன்லைன் பரிசோதனைத் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம்  பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பத்தனம்திட்டா  மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஒரு பெண்  டாக்டர் வழக்கம்போல நோயாளிகளுக்கு ஆன்லைன்  பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது  ஆன்லைனில் வந்த திருச்சூரை சேர்ந்த முகம்மது  சுகைப் (21) என்ற வாலிபர் திடீரென தன்னுடைய ஆடைகளைக் களைந்து நிர்வாண போஸ்  கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் உடனடியாக அவரது இணைப்பை  துண்டித்தார். இது குறித்து சைபர் கிரைம் மற்றும் ஆரன்முளா போலீசில் அவர்  புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகம்மது சுகைபை கைது  செய்தனர்.

Related Stories: