தேசிய கல்விக்கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய்குமார் பேட்டி

சென்னை: தேசிய கல்விக்கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய்குமார் கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் கல்வி கருதரங்கத்திற்கு பின் சஞ்சய்குமார் பேட்டி அளித்து வருகிறார். தேசிய கல்விகொள்கையில் குறிப்பிட்டுள்ள தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் கூறியுள்ளார்

தேசிய கல்வி கொள்கை 2019 (NEP) இந்தியாவின் மக்களிடையே கல்வியை மேம்படுத்துவது என்ற நோக்கத்தில் இந்திய அரசால் வடிவமைக்கப்பட்ட ஆவணம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கு ஆரம்ப கல்வியை இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது. மழழையர் கல்வி இந்தக் கொள்கையானது தொடக்க ஆண்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, மேலும் 2025-ம் ஆண்டுக்குள் 3-6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் பெருமளவில் அதிகரிக்கப்பட்ட முதலீட்டுடனும் புதிய முன்னெடுப்புகளுடனும் கூடிய தரமான மழழையர் பேனலையும் கல்வியையும் வழங்குவதை உறுதி செய்வதை இலக்காக கொண்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக 2030 ஆம் ஆண்டுக்குள் பள்ளிக்கு முந்தைய வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளி வரையில் 100% மொத்த சேர்க்கை அளவீட்டை அடையவேண்டும். கல்விபெறும் வாய்ப்பில் இடைவெளிகளைத் தற்போதுள்ள பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலமாகவும், குறைந்த/சேவையில்லாத பகுதிகளில் புதிய வசதிகளை உருவாக்குவதன் மூலமாகவும், போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகளை ஏற்படுத்தி பள்ளியை மறு ஒழுங்குபடுத்துவதன் மூலமாகவும் சரிசெய்யப்படும். அதேவேளையில், அனைத்து மாணவர்களின், குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.

வருகைப்பதிவையும் கற்றல் பயன்களையும் கவனிப்பதன் மூலமாகவும், பள்ளியை விட்டு நின்ற மற்றும் பள்ளிக்கு வராத குழந்தைகளை ஆசிரியர்கள், சமூக சேவகர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் கண்டறிவதன் வாயிலாகவும், நீண்ட காலம் பள்ளிக்கு வராத வளரிளம் பருவத்தினருக்கான திட்டங்கள் மூலமாகவும் குழந்தைகள் அனைவரின் பங்கேற்பும் கற்றலும் உறுதிசெய்யப்படும். முறையான மற்றும் முறைசாரா முறைகள் சம்பந்தப்பட்ட கற்றலுக்கான பல பாதைகள், திறந்த மற்றும் தொலைதூரப் பள்ளி மற்றும் தொழில்நுட்பத் தளங்களை வலுப்படுத்துவதன் மூலம் கிடைக்கும்.

உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால், அவர்கள் முடிந்தவரை விரைவாகப் பள்ளிக்குத் திரும்புவதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்படும். நடவடிக்கைகளில் பள்ளிகளில் சுகாதாரப் பணியாளர்களைப் பணியமர்த்தல், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுவான சமூகம் ஆகியோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களைப் பொருத்தமான சுகாதாரச் சேவைகளுடன் இணைத்தல் ஆகியவை அடங்கும்.

கல்வி உரிமை சட்டத்திற்கான விதிகளின் கட்டுப்பாடு கணிசமாகக் குறைக்கப்பட்டாலும், (உடல்சார் மற்றும் உளவியல்சார்) பாதுகாப்பு, கல்விபெறும் வாய்ப்பு மற்றும் சேர்க்கை, பள்ளிகளின் இலாப நோக்கமற்ற பண்பு, கற்றல் பயன்களுக்கான குறைந்தபட்ச தரங்கள் ஆகியவையும் உறுதிசெய்யப்படும். இது உள்ளூர்ச் சூழல்மாற்றங்கள் மற்றும் மாற்று முறைகளை அனுமதிக்கும். அதோடு, அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் பள்ளி தொடங்குவதையும் எளிமையாக்கும். பள்ளிக்கு முந்தையக் கல்வியிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த கல்வி உரிமைச் சட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: