பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..!!

டெல்லி: பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013ல் வழக்கு தொடரப்பட்டது. 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் குஜராத் மாநிலம் காந்தி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மனைவி, மகன் உட்பட்ட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாமியாரின் மனைவி, மகன் உட்பட 5 பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என கூறி நீதிமன்றம் விடுவிடுத்திருந்தது.

2013ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என காந்திநகர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே மற்றொரு சிஷ்யை பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஏற்கனவே பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ராஜஸ்தான் சிறையில் சாமியார் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவர் இறந்த நிலையில் சாமியாரின் மனைவி உள்பட 6 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 2001 - 2006 வரை பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: