இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் இடம்பெறுவார்; மிட்செல் ஸ்டார்க் சந்தேகம்.! ஆஸி. பயிற்சியாளர் தகவல்

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. வலுவாக உள்ள இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் இருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்திய சுற்றுப் பயணத்தில் கேமரூன் கிரீன் இடம்பெற்றுள்ளார். அவரை அணியில் இருந்து நீக்கவில்லை. திறமைமிக்க பவுலரான அவர், மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையிலும் அற்புதமாக ஆடக் கூடியவர்.

அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை முதல் டெஸ்ட்டில் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அவரது கை விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. அவர் 2வது டெஸ்ட்டில் விளையாட தகுதியாகிவிடுவார் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும் அதனை தற்போது உறுதியாக கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இந்திய மண்ணில் கடந்த 2004-ல் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதன்பின்னர் டெஸ்ட் தொடரை அந்த அணி வென்றதில்லை. இதனால் 19 ஆண்டுகால பின்னடைவுக்கு முடிவு கட்டும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் மோதவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 9ம்தேதி நாக்பூரிலும், அடுத்தடுத்த போட்டிகள் டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்திலும் நடைபெறுகின்றன.

Related Stories: