ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்.27-ம் தேதி நடைபெறவுள்ளது, இதனை முன்னிட்டு இன்று வேட்ப்பு மனு தாக்கல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று காலை 11 மணிக்கு ஈரோடு மாநகராச்சி அலுவலகத்தில் தொடங்கியது.

வேட்ப்பு மனு தாக்கல் முதல்நாள் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் வேட்ப்பு மனு தாக்கல் செய்ய சுயாட்சி வேட்பாளராக வருகைதந்துள்ளார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து பத்மராஜன், கோவை மாவட்டத்தை சேர்ந்த நூர் முகமது, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சங்கரபாண்டி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் உள்ளிட்ட சுயாட்சி வேட்பாளர்கள் நூதன முறையில் வேட்ப்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளார்.

பிரதான கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று வேட்ப்பு மனு தாக்கல் செய்ய வருவார்களா என்று எதிர்ப்பார்ப்பு உள்ள நிலையில் தற்பொழுது சுயச்சி வேட்பாளராக 4 வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து நூதனமுறையில் வருகை தந்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்ப்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளார். இந்த வேட்ப்பு மனு தக்கலை முன்னிட்டு ஈரோடு மாநகராச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வேட்ப்பு மனு தாக்கல் ஈடுபடக்கூடிய 42 அலுவலர் நேரடியாகவும், வேட்ப்பு மனு தாக்கல் செய்ய வரக்கூடிய வேட்பாளருக்கு உதவி செய்யும் வகையில் அங்கங்கு அலுவலர் கொண்ட குழு மைத்துள்ளதாகவும், ஈரோடு மாநகராச்சி அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வேட்ப்பு மனு தாக்கல் 11 மணிக்கு தொடங்கிய நிலையில் ஒவ்வெரு நாள் மதியம் 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்ப்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்.7-ம் தேதி இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.8-ம் தேதி வேட்ப்பு மனு பரிசீலனை, 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். அமமுக கட்சி வேட்பாளர் சிவா பெர்சத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக கட்சி வேட்பாளர் ஆனந் உள்ளிட்ட வேட்பாளர் அறிவித்த நிலையில் அதிமுக கட்சி சார்பில் ஒபிஸ், இபிஸ் இரு அணிகளும் வேட்பாளர்கள் இறுதி செய்யாத வகையில் வரக்கூடிய நாட்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்கள், பிப்.5 ஞாயிறு என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: