இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கரின் 191-வது நினைவு தினம்: மன்னருக்கு அரசு விழா, சிலை அமைக்க வாரிசுகள் கோரிக்கை

வேலூர்: இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கருக்கு வேலூரில் சிலை அமைக்க வேண்டும் என்று அவரது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றும் மன்னரின் வாரிசுகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் பாலாற்றுக்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கரின் நினைவு மண்டபம் முத்து மண்டபமாக கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. விக்ரம ராஜசிங்கரின் 191-வது நினைவு தினத்தை முன்னிட்டு மன்னரின் குடும்பத்தினரும், பொதுமக்களும், மன்னரின் குடும்ப வாரிசுகளின் ஒருவரான அசோக் ராஜா தலைமையில் ராஜாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், பேசிய மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் விக்ரம ராஜசிங்கர் தமது ஆட்சி காலத்தில் மேற்கொண்ட தமிழ் பணியின் மீது முன்னாள் முதல்வர் கலைஞர் மிகுந்த அபிமானம் கொண்டு இருந்ததாக தெரிவித்தனர். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கரின் பிறந்த நாளில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும். முத்து மண்டபத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஏற்று பராமரிக்க வேண்டும். வேலூரில் மன்னர் விக்ரம ராஜசிங்கருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மன்னரின் வாரிசுகள் முன்வைத்தனர். 

Related Stories: