சி ல் லி பா யி ன் ட்...

* சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 9வது இடம் பிடித்து ஏமாற்றமளித்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கிரகாம் ரீட் (58 வயது, ஆஸி.) பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2019 ஏப்ரலில் பொறுப்பேற்ற ரீட் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், 2022 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் (2023) அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்தை ஸ்டீவன் ஸ்மித் 4வது முறையாக வென்றுள்ளார். ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோரை தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்த்தும் 3வது வீரர் என்ற பெருமை ஸ்மித்துக்கு கிடைத்துள்ளார். சிறந்த வீராங்கனைக்கான பெலிண்டா கிளார்க் விருதை பெத் மூனி 2வது முறையாக வென்றுள்ளார்.

* பாங்காக்கில் நடைபெற உள்ள தாய்லாந்து ஓபன் சூப்பர் 300 பேட்மின்டன் தொடரில் இருந்து இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நெஹ்வால், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

* ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் - ரியல் சோசிடாட் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 0-0 என கோல் ஏதும் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.

Related Stories: