மக்கள் நலப்பணியாளர் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பு வாதத்தில்,‘‘தமிழக அரசு வழங்கிய பணியை 289 பேர் ஏற்கவில்லை. அதேப்போன்று மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பின் கீழ் ரூ.7500க்கு பணி அமர்த்தப்படுகின்றனர். அதனை உயர்த்தி வழங்கி பணி பாதுகாப்பு வேண்டும். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து உதவியாளர் பணிக்கு ரூ.27,500ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படுகிறது, எனவே அந்த ஊதியத்துக்கு மக்கள் நல பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன், அது ஒன்றிய அரசின் திட்டம், மாநில அரசால் அதில் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பணியில் சேராதவர்களை பணியில் மீண்டும் சேர கூறுங்கள். ஊதியம் குறித்தும், பணி பாதுகாப்பு குறித்தும் பின்னர் முடிவு செய்யலாம் என அறிவுறுத்தி அடுத்த விசாரணையை தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: