இங்கிலாந்து மூத்த நடிகை மரணம்: ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

லண்டன்: இங்கிலாந்து நடிகை சில்வியா சிம்ஸ் (89), அவரது ஓய்வு இல்லமான டென்வில் ஹாலில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தற்போது மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைவுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த சில்வியா சிம்ஸ், லண்டனில் கடந்த 1934ம் ஆண்டு ஜனவரி 6ல் பிறந்தார். அவர் கான்வென்ட் பள்ளிகளிலும், ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டிலும் கல்வி பயின்றார். 1953ல் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் நாடகமான ‘தி ஆப்பிள் கார்ட்’-யில் நடித்து பிரபலமானார்.

கடந்த 1956ம் ஆண்டு வெளியான ‘டீனேஜ் பேட் கேர்ள்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, திரையுலகின் முன்னணி நடிகையானார். தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் சாகசமான ‘ஐஸ் கோல்ட் இன் அலெக்ஸ்’ படத்தில் ராணுவ செவிலியராக நடித்து புகழ்பெற்று பல்வேறு விருதுகளை பெற்றார். கிட்டதட்ட 60 ஆண்டுகளாக திரைத்துறையில் கால்பதித்து இருந்த சில்வியா சிம்ஸின் மறைவு, இங்கிலாந்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: