கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது

சென்னை: சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 4வது தெருவில் உள்ள வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி கே.ேக.நகர் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டிற்கு பலர் வந்து சென்றது உறுதியானது.  

அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைத்து சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த சாலிகிராமம் விஜயராகவபுரம் 4வது தெருவை சேர்ந்த பிரபாகரன்(36), மற்றும் சந்தோஷ்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: