பூட்டிய வீட்டில் துணி திருட்டு 2 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர்: பூட்டிய வீட்டில் துணி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவை சேர்ந்தவர் வேணி (47). இவர் ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன் செங்குன்றம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து நேற்றுமுன்தினம் காலை தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நகைகள் எதுவும் கொள்ளைப்போகவில்லை. இதுகுறித்து வேணி கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வியாசர்பாடி எஸ்ஏ.காலனி 3வது தெருவை சேர்ந்த கரண் என்கின்ற கத்தி கரண் (19), அயனாவரம் 4வது தெருவை சேர்ந்த திவின்குமார் (19) ஆகியோரை கைது செய்தனர். இதன்பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: