ஒரு வாரம் நடத்திய சோதனையில் குட்கா விற்ற 104 பேர் கைது

சென்னை: சென்னையில் ஒரு வாரம் நடத்திய சோதனையில் குட்கா விற்பனை செய்ததாக 104 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 74 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பதுக்கி விற்பனை செயத்தாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டடு 104 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 74 கிலோ குட்கா பொருட்கள், 2 கிலோ மாவா, ரூ.1,920 பணம், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: