பணம், பரிசு பொருள் கொடுப்பதை தடுக்க கூடுதல் போலீஸ்

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைக் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 4 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக உள்ள காவிரி ஆற்றுப்பாலம் சோதனைச்சாவடியில், நிலையான கண்காணிப்பு குழுவினரும் போலீசாருடன் இணைந்து தீவிரவாத கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்ளிட்ட முக்கியமான 36 இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் போலீசாரும், கண்காணிப்புக் குழுவினரும், பறக்கும் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனைக்கு என்றே 256 போலீசார் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் உள்ளனர்.

அவர்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பவானி ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக 12 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கூடுதலாக 60 போலீசார் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

Related Stories: