கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் சடலம் மீட்பு: கொலையா என விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் ஊராட்சியில் உள்ள குந்தேளிமேடு பகுதியில் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை குந்தேளிமேடு பகுதியில் புதிய கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு இளம்பெண் சடலம் கிடப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

முதல் கட்ட விசாரணையில், அப்பெண் அதே பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரி (24) எனத் தெரியவந்தது. மேலும், அவருக்கு திருமணமாகி, கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருப்பதாகவும், நேற்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் மற்றும் உறவினர்களிடம், குடும்பத் தகராறில் அப்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்து பள்ளத்தில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: