ஆப்கான் மாணவியர் நுழைவு தேர்வு எழுத தடை: தலிபான் அரசு திடீர் உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருவதால் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்படுகின்றன. குறிப்பாக மாணவியர் கல்வி பயில பல்வேறு தடைகளை விதித்து வருகின்றறனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தலிபான்களின் சமீபத்திய உத்தரவில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலிபான்களின் உயர் கல்வி துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மாணவியரை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிவதைத் தடைசெய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உட்பட பல இஸ்லாமிய நாடுகளும் அமைப்புகளும், ஆப்கான் பெண்கள் மற்றும் மாணவியருக்கு விதிக்கப்படும் தடையை கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: