எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 229 பேர் பலி

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 229 ஆக உயர்ந்துள்ளது. எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. திங்களன்று கென்சோ ஷாசா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தது.

மண்ணில் புதைந்து பலியான பலர் சடலமாக மீட்கப்பட்டனர். நேற்று முன்தினம் காலை 146பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மொத்தம் 229 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. எனவே தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

The post எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 229 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: