துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு சிகிச்சைகளை எளிமையக அணுகுதல், ஏழை குழந்தைகள் மறுவாழ்வு, அனைவருக்குமான மருத்துவ சேவைகள் போன்றவற்றிற்கும் முன்னுரிமை அளித்து கமலா ஹாரீஸ் பேசினார். அவரது பேச்சிற்கு மக்கள் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். கமலா ஹாரிஸுக்கு பதில் அளிக்கும் விதமாக வடக்கு கரோலினா பரப்புரையில் பேசிய ட்ரம்ப், 2 கோடி வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைய கமலா ஹாரீஸ் அனுமதித்ததாக குற்றம் சாட்டினார். இதனிடையே ட்ரம்பை விட கமலா ஹாரீஸுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பது தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
The post முன்னாள் வழக்கறிஞருக்கும், குற்றவாளிக்கும் இடையே தேர்தல் என பேசிய கமலா ஹாரீஸ் : புதிய கருத்துக்கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளினார்!! appeared first on Dinakaran.
