டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்

டெல்லி: டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என மாற்றி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-வைத்து ஆண்டு விழாவை அம்ரித் மகோத்சவ் என்று ஒன்றிய அரசு கொண்டாடி வருகிறது.  

அம்ரித் மகோத்சவின் ஓர் அங்கமாக முக்கால் கார்டனின் பெயர் அம்ரித் உதயான் என மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி கால ஆதிக்க அடையாளங்களை மாற்றும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அம்ரித் உதயான் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை திறந்து வைக்கவுள்ளார்.

குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முக்கால் தோட்டத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மத ரீதியாக சமூகத்தை பிரிக்கும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெயர் மாற்றத்தின் மூலம் பிற மதத்தினர் மீது வெறுப்புணர்வை விதைப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

Related Stories: