முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்

கேப் டவுன்: இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டெர் டுசன் அபாரமாக ஆடி சதமடித்து 111 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் தனது பாணியில் ஆடி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 113 ரன்னில் அவுட்டானார். டேவிட் மலான் 59 ரன் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நார்ஜே 4 விக்கெட்டும், சிசந்த மகளா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Stories: